சென்னை ஆக்கி சங்கம் சார்பில் 59-வது சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஐ.ஓ.பி. 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்டேட் வங்கியை தோற்கடித்தது. ஐ.ஓ.பி. அணியில் தலிப் ஷா 3 கோலும், முத்துச்செல்வன், வினோத் ராயர் தலா ஒரு கோலும் அடித்தனர். ஸ்டேட் வங்கி அணியில் ஸ்ரீனிவாசன் ஒரு கோல் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி 4-0 என்ற கோல் கணக்கில் சென்னை மாநகர போலீசை எளிதில் வென்றது. இந்தியன் வங்கி அணியில் சதீஷ் 2 கோலும், சோமன்னா, பிலிப் மார்ட்டின் தலா ஒரு கோலும் போட்டனர்.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் எஸ்.டி.ஏ.டி.-வருமான வரி (பிற்பகல் 2 மணி), தெற்கு ரெயில்வே – தமிழ்நாடு தபால் துறை (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.