Sunday, September 8, 2024
Google search engine
Homeஇலங்கைமத்திய பிரதேசம்: திருமண ஊர்வலத்தின் மீது லாரி மோதி 6 பேர் பலி

மத்திய பிரதேசம்: திருமண ஊர்வலத்தின் மீது லாரி மோதி 6 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் ரெய்சன் மாவட்டத்தில் கமரியா கிராமத்தில் திருமண ஊர்வலம் ஒன்று நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, போபால் நகரில் இருந்து ஜபல்பூர் செல்லும் சாலையில் லாரி ஒன்று வந்துள்ளது.

அது, திடீரென எதிர்பாராத வகையில், தவறான திசையில் சென்றது. இதில், திருமண ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது லாரி மோதியது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் வரை காயமடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக போபால் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.

இதனால், பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்ததும் லாரி ஓட்டுநர் தப்பியோடி விட்டார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது. இதுபற்றி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments