கனடாவில் தற்கொலை தவிர்ப்பு தொடர்பில் இலவச அவசர அழைப்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அவசர அழைப்பு உதவி சேவை நாடு முழுவதிலும் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் கொண்டவர்கள், ஏனைய மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் 24 மணித்தியாலங்களும் அழைப்பு எடுத்து ஆலோசனை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
988 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு உதவி பெற்றுக்கொள்ள முடியும்.
மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த உதவியை பெற்றுக்கொள்வதன் மூலம் ஆபத்துக்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை தவிர்ப்பு அவசர அழைப்பு சேவையை முன்னெடுப்பதற்காக சுமார் 158 மில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்கொலைகளினால் கனடாவில் வருடாந்தம் சராசரியாக 4500 பேர் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.