Thursday, November 21, 2024
Google search engine
Homeஇலங்கைமீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்களுக்கு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து  வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழமான மற்றும் ஆழமற்ற  கடல் பகுதிகளில் செயற்படும் மீன்பிடி மற்றும் கடற் சமூகத்திற்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி 9.5 வடக்கு அட்சரேகை மற்றும் 86.0 கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகாமையில் திருகோணமலையில் இருந்து சுமார் 550 கிலோமீற்றர் தொலைவில் மையங் கொண்டுள்ளது.

இது இன்று (02) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை (03) புயலாக வலுப்பெறவுள்ளது.

இந்த அமைப்பு இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் இருந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4-ம் திகதி வட தமிழக கடற்கரையை கடக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments