Sunday, September 8, 2024
Google search engine
Homeவிளையாட்டுரோகித்,கோலி அல்ல.. என்னுடைய ரோல் மாடல் அவர்கள்தான் - நிதிஷ் ரெட்டி

ரோகித்,கோலி அல்ல.. என்னுடைய ரோல் மாடல் அவர்கள்தான் – நிதிஷ் ரெட்டி

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நல்ல ஆல் ரவுண்டராக விளங்கிய நிதிஷ் குமார் ரெட்டி, 303 ரன்களும், 3 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தார். அவரை ரசிகர்கள் பலரும் பாராட்டி வந்தனர்.

இதன் காரணமாக அவரை சிறந்த ஆல் ரவுண்டராக மாற்ற வேண்டும் என்றும் அதற்கான பயிற்சியை விரைவில் பிசிசிஐ துவங்க வேண்டும் என்று விமர்சகர்கள் அப்போதே கூறியிருந்தனர். ஆனால் நிதிஷ் ரெட்டி இடமிருந்த ஆல்ரவுண்டர் திறமையை கண்ட தேர்வுக்குழு அவருக்கு உடனடியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்கியது. இருப்பினும் கடைசி நேரத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஜிம்பாப்வே பயணிக்க முடியாமல் போனது.

இந்நிலையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா மற்றும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தம்முடைய ரோல் மாடல் என நிதிஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். அத்துடன் ஹர்திக் பாண்ட்யா தமக்கு முக்கியமான ஆலோசனைகளை கொடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக டி20 உலகக்கோப்பைக்கு தயாரான பரபரப்பான சூழ்நிலையில் கூட ஹர்திக் பாண்ட்யா தமக்கு மெசேஜ் செய்ததாக அவர் கூறியுள்ளார். அதை கேட்டு வியப்படைந்ததாக தெரிவிக்கும் நிதிஷ் ரெட்டி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு;-

“ஹர்திக் பாண்ட்யா பாய் எனக்கு மெசேஜ் செய்து களத்தில் என்னுடைய எண்ணம் மற்றும் எனர்ஜி நன்றாக இருப்பதாக வாழ்த்தினார். மேலும் தொடர்ந்து விளையாட்டை மதித்து விளையாடுமாறு சொன்னார். அத்துடன் விரைவில் நாம் நேரில் பேசுவோம் என்றும் சொன்னார். ஆனால் ஐபிஎல் தொடர் முடிந்ததும் அவர் எனக்கு அனுப்பிய அந்த மெசேஜ்களை பார்த்து நான் வியப்படைந்தேன். ஏனெனில் அவர் டி20 உலகக்கோப்பைக்கு தயாராக மிகவும் பிசியாக இருந்தார். ஹர்திக் பாண்ட்யா மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் நான் ஆல் ரவுண்டராக வருவதற்கான உத்வேகமாக இருக்கிறார்கள். எனவே மெசேஜ் அனுப்பியதற்காக நன்றி என்று நான் பாண்டியாவுக்கு பதிலளித்தேன்” என கூறினார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments