இசைஞானி இளையராஜா லண்டனில் இருந்து பாரிஸ் நகருக்கு ரெயில் பயணம் மேற்கொள்ளும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ என்ற பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.
தமிழ் திரைத்துறையில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக இருந்த இளையராஜா தற்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இளையராஜாவின் பயோபிக் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க நடிகர் தனுஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.