அம்மிக் கல்லின் கீழ் தோண்டப்பட்ட குழிக்குள் மறைத்து வைத்து பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு-15 மட்டக்குளி பெர்குசன் வீதியிலுள்ள வீடொன்றில் வைத்தே அப் பெண்ணை கைது செய்துள்ளதாக தெரிவித்த கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் சந்தேக நபரான அப் பெண்ணிடம் இருந்து 1310 போதைப்பொருள் குளிசைகளை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்காக, பதில் பொலிஸ் மாஅதிபர் தேrபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. மேல் மாகாண ஊழல் ஒழிப்புப்பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி அப் பெண்ணின் வீட்டில் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வோருக்கு தலா நூறு ரூபாய்க்கு போதைப்பொருள் விற்பனை செய்து வருவது பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 56 வயதுடைய சந்தேக நபரான அந்தப் பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.