யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எய்ட்ஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடாளாவிய ரீதியில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்ட சில பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆணுறை தானியங்கி இயந்திரமே காணாமல் போயுள்ளது.