கண்டி நகரின் வடுகொடபிட்டிய வீதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் வீதியின் இருபுறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.
இதனால் வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டது. கண்டி மாநகர தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து மரத்தை அகற்றி வீதியை திறக்கும் பணியில் ஈடுபட்டனர்.