கிறிஸ்மஸ் காலத்தை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லாவிட்டால் அறிவிக்க பொலிஸ் தலைமையகத்தில் இருந்து விசேட தொலைபேசி இலக்கமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 011 247 27 57 என்ற இலக்கத்தின் ஊடாக இது தொடர்பான தகவல்களை அறிவிக்க முடியும்.