காட்டு யானை ஒன்றுடன் மோதி பயணிகள் பஸ் ஒன்று விபத்திற்குள்ளானது. தனியார் பயணிகள் பஸ் யானையுடன் மோதுண்டதால் வீதியை விட்டு விலகி பின் மரத்தில் மோதி விபத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இபலோகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹயிலுப்பல்லம பகுதியில் இன்று (24) அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கெகிராவையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பஸ்ஸின் சாரதி, நடத்துனர் உள்பட 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.