கிறிஸ்மஸ் என்பது எதிர்பார்ப்புக்களின் திருநாளாகும். கண்ணீருடன் இருளில் சென்ற மக்களுக்கு ஒளி கிட்டியது. அந்த எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகை அமைய பிரார்த்திப்போம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
”வறியவர்களுடன் ஒரு வேளை உண்ணுங்கள் என்ற விடயத்தை முன் நிறுத்தி, மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவைக் கொண்டாடும் நாம், ஒருபோதும் யதார்த்தத்தை மறக்கக்கூடாது.
பல்வேறு சவால்கள் நம்முன் நிற்கின்ற தருணத்தில், நாம் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றோம். நாட்டின் நமக்கிருக்கும் சவால்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொண்டு, பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டுமென அழைப்பு விடுக்கும் அதேநேரம், உலக மக்கள் அனைவருக்கும் அன்பும், அமைதியும் நிறைந்த பண்டிகையாக இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகை அமையட்டும் என வாழ்த்துகிறேன்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.