மாத்தறை சிறைச்சாலையிலிருந்து காய்ச்சல் காரணமாக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது வரை 16 ஆக அதிகரித்துள்ள நிலையில், மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை வெளியாட்கள் பார்வையிடுவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக அண்மையில் மாத்தறை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாத்தறை சிறைச்சாலையின் மூன்று கைதிகளில் ஒருவர் கடந்த 22 ஆம் திகதி இரவு உயிரிழந்திருந்தார். இந்த நிலையில், கைதிகளை வெளியாட்கள் பார்வையிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.