நத்தாரைக் கொண்டாட பணம் இல்லாததால் 5 பிள்ளைகளின் தந்தையொருவர் தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் நேற்றிரவு 11 மணியளவில் கல்லடி பாலத்தில் இருந்து குதித்துள்ள நிலையில் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்த குற்றச் சாட்டில் குறித்த நபரைக் கைதுசெய்த பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.