யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று மதியம் வரை 130 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து செல்கின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமாக இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டன.
கடந்த ஒரு சில வாரங்களாக கூடுதலான டெங்கு நோயாளிகள் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.