16 வயதான பிக்கு ஒருவர் 14 வயதான சிறுமியை விகாரையில் தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிக்குவிற்கு சிறுமியுடன் காதல் தொடர்பு இருந்ததாகவும், அச்சிறுமியை மீரிகம பிரதேசத்தில் உள்ள விஹாரைக்கு அழைத்துச் சென்று, அங்கு நான்கு நாட்கள் தடுத்துவைத்திருந்தார் என்றும் பிக்கு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பிக்குவை, நீதிமன்றத்தில் முற்படுத்தியதன் பின்னர் அவரை, ஜனவரி 4ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.