ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியின் வேட்பாளரை ஆதரிப்பது அல்லது தமிழ்க் கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரைக் களமிறக்குவதா அல்லது ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்பதா என்பது தொடர்பில் எந்தத் தீர்மானமும் இதுவரை எடுக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவினை எடுப்போம் எனவும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலோ அதன் வேட்பாளர் தொடர்பிலோ நாம் அவசரப்படமாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.