தரமற்ற நோய் எதிர்ப்பு ஊசி மருந்து சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இன்று (26) மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் எழுத்து மூலமும் ஏனைய ஆதாரங்களும் விசாரணைகளின் வசதிக்காக அவசியமானது என கருதியதால் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்க தீர்மானித்ததாக அமைச்சர் கூறினார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நெறிப்படுத்துவதற்காக தானாக முன்வந்து வாக்குமூலம் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.