நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்படவில்லை எனவும், பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் காரணமாக சிலர் தங்களுடைய இருப்பிடத்தை மாற்றியுள்ளதாகவும், ஆட்கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.