நாட்டில் டெங்கு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் நாளாந்த எண்ணிக்கை 335 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 25 தினங்களில் 8,728 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 85,216 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனார்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாகாணத்தில் இதுவரை மொத்தமாக 38,986 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.