ஜோர்தானில் சஹாபி பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிகின்ற கிட்டத்தட்ட 350 இலங்கையர்கள் சம்பளம் வழங்கப்படாமையால் கடுமையான நிலைமைகளை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 18 மாதங்களாக தொழிற்சாலை நிர்வாகம் சம்பளம் வழங்கவில்லை. இதனால் இலங்கையர்கள் தங்களுடைய தங்கும் விடுதிகளில் உணவு மற்றும் தண்ணீரின்றி சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் கடுமையாக நோய்வாய்ப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட குழுவினர் கூறுகின்றனர்.
தமது நிலை குறித்து ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போதிலும், இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணையும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் காணொளி ஒன்றை வெளியிட்டு தமது நிலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழப்புகள் ஏற்படும் நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் தம்மை நாட்டுக்கு அழைத்து வருமாறு இலங்கை அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.