கதிர்காமம் விகாரைக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட 38 பவுண் தங்கத் தகடுகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விகாரையின் பிரதான பூசகர் சோமிபால டி ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
களஞ்சிய காப்பாளராக பணியாற்றிய சுட்டி கபுவா எனப்படும் சமன் பிரியந்த கடந்த 19ஆம் திகதி சட்டத்தரணி ஊடாக திஸ்ஸமஹாராம நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.