விசேட தேவையுடைய சிறுவர்களை வலயக் கல்வி பணிமனையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சிறுவர்களுக்கு முறையான கல்வியை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்தகைய சிறுவர்களின் விசேட தேவைகளை கருத்தில் கொள்வதற்கு வலய மட்டத்தில் நூறு மதிப்பீட்டுக்கு குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந் நிலையில், குறித்த சிறுவர்களை உரிய வயதில் பாடசாலைகளுக்கு முதலாம் தரத்திற்கு சேர்ப்பது தொடர்பான பாடத்திட்டத்தையும் அமைச்சு தயாரித்து மதிப்பீட்டுக் குழுக்களுக்கு வழங்கியுள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வீட்டில் கற்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், அத்தகைய மூன்று சிறுவர்களுக்கு ஒரு ஆசிரியர் பணியமர்த்தப்படுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 1500 ஆசிரியர்கள் விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக தங்களை அர்ப்பணிப்பதற்கு பயிற்சி பெற்றுள்ளனர் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.