Sunday, December 22, 2024
Google search engine
Homeஇலங்கைபரீட்சை நிலையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள்

பரீட்சை நிலையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள்

உயர்தர மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

”உயர்தரப் பரீட்சை ஜனவரி 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இலங்கையின் 25 மாவட்டங்களில் உயர்தரத்திற்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதை உறுதிப்படுத்த பேரிடர் முகாமைத்துவம், ஆயுதப் படைகள், பொலிஸ் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுகின்றோம். பரீட்சை நிலையங்களில் எந்த தடையும் இல்லாமல், எந்த பிரச்சனையும் இல்லாமல் பரீட்சை எழுதவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டார்.

உயர்தரப் பரீட்சை ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,298 நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments