கடந்த 2023 டிசம்பர் 1 அன்று, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா, இயக்கிய இந்தி திரைப்படமான “அனிமல்” உலகளவில் வெளியானது.
அனிமல் படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்திருந்தனர். மிக பெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம் ரூ.800 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி குவித்தது.
இதை தொடர்ந்து, இயக்குனர் சந்தீப் ரெட்டி, “ஸ்பிரிட்” எனும் திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இதில் “பாகுபலி” திரைப்பட கதாநாயகன் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.
தனது விருப்பங்கள் குறித்து சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்ததாவது:
சிரஞ்சீவி மற்றும் ஷாருக் ஆகியோரை இயக்க விரும்புகிறேன். அவர்கள் எனக்கு கனவு நாயகர்கள். எப்போது இயக்குவேன் என தெரியாது, ஆனால் நிச்சயம் அவர்களை வைத்து திரைப்படம் இயக்குவேன்.
பலருடன் இணையாமல் நானே கதை எழுதுவதால் எனக்கு ஒரு நடிகரிடம் கதை சொல்லவே பல மாதங்கள் ஆகிறது.
சிரஞ்சீவி, ஷாருக் ஆகியோரை ஈர்க்கும் நல்ல அழுத்தமான கதையுடன் எவராவது என்னிடம் முன்வந்தால் உடனே இயக்கவும் தயாராக உள்ளேன். அவ்வாறு கதை கிடைத்தால் 9 மாதங்களில் படத்தை முடித்து விடுவேன்.
இவ்வாறு சந்தீப் கூறினார்.