ஜோர்தானில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் சிலர், தம்மை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 250 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் குறைந்தபட்ச வசதிகள் கூட இன்றி பலவந்தமாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜோர்தானில் பல வருடங்களாக தங்கி தொழில்புரிந்த நிலையில், பலரது விசா முடிவடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் தமக்கு அதிகாரிகள் உரிய சம்பளத்தை வழங்குவதில்லை எனவும், இலங்கைக்கு மீள வருவதற்கு இடமளிப்பதில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.