நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு சிலாபம் வீதியின் கட்டுவ பகுதியில் நேற்று (04) இரவு ஏற்பட்ட விபத்தில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கொள்கலன் லொறி அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் அவரது மகளும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மகள் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.