தரமற்ற ஹியுமன் இமியுனிகுளோபியுலின் தடுப்பூசி சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் மற்றுமொரு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமார இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.