பேராதனை பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழக ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பல்கலைக்கழக சுகாதார நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழக சுகாதார நிலையத்தில் காய்ச்சல், தடிமன் என வந்த செனட் காரியாலய ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து குறித்த நபரை உடனடியாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.