காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காதலன் கத்தியால் குத்தி காதலியை கொலை செய்த சம்பவமொன்று பிலியந்தலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காதலியைக் கொலைச் செய்ய பயன்படுத்திய கத்தியுடன் 24 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் ஜே.எம்., ஆயிஷா லக்மினி (26 வயது) என்ற இளம் பெண்ணாவார். அப்பெண் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
சந்தேக நபரான காதலனுடன் கொல்லப்பட்ட யுவதி சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் உறவை வளர்த்துக்கொண்டு சுமார் மூன்று மாதங்களுக்கு முன் தனது காதலனை தவிர்த்து வந்ததாக சந்தேகநபரின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.