சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் சிறைச்சாலைகளில் தொற்று நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த ரணசிங்க, இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தின் சுகாதார ஊழியர்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், அவர்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.