யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் பல கோடி ரூபாய் பெறுமதியான அபின் போதைப்பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் நேற்று (08) மீட்கப்பட்டுள்ளன.
48 கிலோ நிறை கொண்ட அபின் போதைப்பொருளும் 28 கிலோ நிறை கொண்ட கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி
86 கோடி ரூபாய் எனவும், கேரள கஞ்சாவின் பெறுமதி 45 இலட்சம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.