தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் 41 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே 41 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலத்தை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சபையில் இன்று (09) சமர்ப்பித்தார். இதனையடுத்து இடம்பெற்ற விவாதத்தின் முடிவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. வாக்கெடுப்பைக் கோரினார்.
இதனையடுத்தது இடம்பெற்ற வாக்கெடுப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே .வி.பி. ஆகியன புறக்கணித்த நிலையில் தமிழ் தேசியமக்கள் முன்னணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிராக வாக்களித்தன. அரச தரப்பினர் ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த சட்ட மூலத்தை தான் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்த முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் அரச தரப்பு எம்.பியுமான சரத் வீரசேகர வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.