தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பஸ்சாரதியும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மிஹிந்தலை கன்னட்டிய பிரதேசத்தில் இன்று (09) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் கற்குளம் கலத்தேவ பகுதியை சேர்ந்த முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் இந்திரசிறி என்பவரே உயிரிழந்துள்ளார்.
பஸ் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பஸ்ஸில் பயணித்த மேலும் நான்கு பேர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.