யுத்தம் சார்ந்த பிரச்சினைகள் அனைத்திற்கும் 2025 இற்குள் தீர்வு காண எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (09) நடைபெற்ற சேர்.பொன்.அருணாச்சலத்தின் நினைவுதின நூற்றாண்டு நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நினைவு தின நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக அவரது சிலை அமைக்கப்பட்டிருக்கும் வளாகத்தில் நடைபெற்றது.