Monday, December 23, 2024
Google search engine
Homeஇலங்கைஇத்தாலிக்கு அனுப்புவதாக பண மோசடி செய்தவர் கைது

இத்தாலிக்கு அனுப்புவதாக பண மோசடி செய்தவர் கைது

வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பல இலட்சம் மோசடி செய்தவர் யாழ்ப்பாணத்தில கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலிக்கு அனுப்புவதாக கூறி 23 இலட்சம் பணம் மோசடி செய்யப்பட்டதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் யாழ். மாவட்ட விசேட குற்றவிசாரணை பிரிவில் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபரை நெல்லியடி பொலிஸ் பிரிவில் தலைமறைவாக இருந்தபொழுது கைது செய்துள்ளனர்.

கைது செய்யபட்டவர் சுன்னாகம் உட்பட யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் போலி விசாக்களை பயன்படுத்தி பத்திற்கு மேற்பட்டவர்களை ஏமாற்றியதுடன் 1 கோடிக்கு மேல் பணம் பெற்று விட்டு தலைமறைவாக இருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் பொலிஸாரால் சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments