Monday, December 23, 2024
Google search engine
Homeஇலங்கைவாகன இறக்குமதி தொடர்பில் புதிய வர்த்தமானி

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய வர்த்தமானி

அரசாங்கத்திற்கு அத்தியாவசியமான வாகனங்களை மட்டும் இறக்குமதி செய்யும் வகையில் புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பொதுவாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை என்றும், சில அரச நிறுவனங்களின் சில அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மாத்திரமே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாட்டு நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கான உதவியைப் பயன்படுத்தி வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும், அந்தத் திட்டங்களின் கீழ், கல்வி அமைச்சுக்கு இரண்டு பஸ்களும், சுகாதார அமைச்சுக்கு 21 டபுள் வண்டிகளும்,  3 பஸ்களும் கிடைக்கும். நடமாடும் மகப்பேறு கிளினிக்குகளுக்கான வாகனங்கள் மற்றும் தொழிலாளர் அமைச்சுக்கு ஒரு வாகனம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்

மேலும், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 3 வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் எனவும், ஸ்ரீலங்கன் விமான சேவையின் மூன்று வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வாகனங்களும் வெளிநாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு உதவி மூலம் வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments