தெற்கு அதிவேக வீதியில் தனியார் சொகுசு பஸ் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெலியத்த மாற்றுப் பாதைக்கு அருகில் குறித்த பஸ் திடீரென தீப்பிடித்துள்ளதாக அதிவேக வீதி பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், பஸ் தீப்பிடித்ததையடுத்து, பயணிகள் அனைவரும் அதிலிருந்து வெளியேறினர். தீயினால் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.எனினும், தீ விபத்தால் பஸ் பலத்த சேதமடைந்தது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.