இந்தியா இலங்கைக்கு இலவசமாக வழங்கும் 20 ரயில் எஞ்சின்களில் 02 எஞ்சின்கள் எதிர்வரும் மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்படி எஞ்சின்கள் இலங்கையில் இயங்குவதற்கு ஏற்றவையா என ஆராயவே இவ்வாறு கொண்டுவரப்படவுள்ளன என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ரயில் எஞ்சின்களை ஆய்வு செய்வதற்காக இலங்கை ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த 05 பரிசோதகர்கள் இந்தியாவிற்கு சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.