முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் – முள்ளுக்காடு வயல் வெளியில் இருந்து வயோதிபப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தேவிபுரம் பகுதியைச் சேர்ந்த மார்கண்டு பாக்கியம் என்பவரே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.