சிங்கப்பூரில் போக்குவரத்து, வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் மந்திரியாக இருந்தவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுப்ரமணியம் ஈஸ்வரன் (60). அந்நாட்டின் ஆளும் கட்சியான பி.ஏ.பி. (People’s Action Party) கட்சியை சேர்ந்த ஈஸ்வரன் கடந்த 2023 ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
பல கோடி ஊழல் செய்ததாக 27 குற்றச்சாட்டுகள் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவாகி, தற்போது அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. முக்கிய குற்றச்சாட்டாக, சிங்கப்பூரில் எப்-1 (F1) எனப்படும் அதிவேக கார் பந்தயத்தை நடத்த ஈஸ்வரன் சட்டவிரோதமாக வழிவகை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில், கடந்த 1986-ம் ஆண்டு லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக ஒரு மந்திரி மீது வழக்கு பதிவான நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. சுமார் 37 ஆண்டுகள் கடந்து தற்போது ஈஸ்வரன் மீதான இந்த ஊழல் குற்றச்சாட்டு அந்நாட்டு அரசியலில் பேசுபொருளாகி உள்ளது.