அரச ஊழியர்களுக்கு மொபிடெல் நிறுவனத்தினால் வழங்கப்படும் உபகார சலுகை பெக்கேஜை அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.