கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றிற்கு காரில் வந்த இனந்தெரியாத நால்வர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தேரர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.