கடந்த 2012ஆம் ஆண்டு மீன்பிடி படகை கடத்தி, மூன்று மீனவர்களை கொன்ற வழக்கில் 7 மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று ( 24) காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், மரண தண்டனைக்கு மேலதிகமாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு 29 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பை அறிவித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒருவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் அப்போதைய சட்டமா அதிபர் 11 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
அவர்களில் 3 பேர் உயிரிழந்து விட்ட நிலையில், 8 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.