கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நேற்றைய தினம் மர்ம நபர்களால் பௌத்த தேரரொருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவத்தில் வணக்கத்துக்குரிய கலபலுவாவே தம்மரதன என்ற 44 வயதுடைய தேரர் உயிரிழந்துள்ள நிலையில் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டிருந்த நால்வரும் தப்பிச் சென்றிருந்தனர்.
இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய வாகனமொன்று கடுவெல்ல பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தீக்கிரையான நிலையில் பொலிஸாரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.