இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி சில தினங்களாக இரு அணியினரும் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விபரம்:
இந்தியா: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், கே.எல். ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
இங்கிலாந்து: ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ்(கே), பென் போக்ஸ், ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜாக் லீச்.