கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த மூவர் ராகம வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இராஜாங்க அமைச்சரும் மற்றுமொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று ( 25) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்திலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலன் லொறி ஒன்றின் பின்பகுதியில் மோதியுள்ளது.
பின்னர், பாதுகாப்பு வேலியில் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.