ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று (25) வியாழக்கிழமை மாலை 4 மணிக்குப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டதில் அனைத்துத் தரப்பினரையும் அணிதிரளுமாறு யாழ். ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.