கடலில் நீராடச் சென்ற மூவர் இன்று (25) கடலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் உயிர் பிழைத்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றுமொருவரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் குடாவெல்ல, மோதரவத்தை கடலில் நீராடச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் களுத்துறையைச் சேர்ந்த 35 வயதுடைய சம்பத் குமார என தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போயுள்ளவர் கம்புருபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய உதார புஷ்பகுமார எனத் தெரிவிக்கப்படுகின்றது.