விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சென்றிருந்தார்.
உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகளை 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் இன்று (25) அதிகாலை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு கார் அதே திசையில் சென்று கொண்டிருந்த கொள்கலன் ட்ரக் உடனும் வீதியின் பாதுகாப்பு வேலியிலும் மோதி விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.